அதிர்ச்சி செய்தி, 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.

By Rajkumar · 17/8/2021

ஒருக் காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் இன்று காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உண்மையில் இவர் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.

அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். மேலும், இவர் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவரை கடந்த 7 ஆண்டுகளாக எந்த தொலைக்காட்சியிலும் கான முடியவில்லை, இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் துவங்கிய சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார்.

இதையும் பாருங்க : எப்ப பாத்தாலும் கிராமத்து லுக்லதா இறக்கனும்னு சட்டமா என்ன - படு மாடர்னாக மாறிய ஆர் கே சுரேஷ்.

இவரது ரீ - என்ட்ரியை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கிராமிய கலைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக சிங்கப்பூரில் குடியேறினார். தான் கற்ற பாரம்பரிய தமிழ் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துக்கள், கதைகள் வாயிலாக பிற நாட்டு மாணவர்களுக்கு பயிற்றுவித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசிய ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் இருந்து வந்து சென்னையில் நான் 10 வருடம் வாழ்ந்திருக்கிறேன்.

பின் 2013 ஆம் ஆண்டு மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று நான் கத்துக்கிட்ட கிராமிய கலைகளை "ஆனந்தக் கூத்து" என்ற பயிற்சியின் மூலம் சொல்லிக் கொடுத்தும், அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்தும் வருகிறேன். இதுவரை 85,000 மாணவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.மேலும், தற்போது இந்த கிராமிய கலைகள் தான் என்னுடைய அடையாளம். இதில் எனக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் எனக்கு சந்தோஷம் நிறைவாக உள்ளது என்று கூறி இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full