தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.
மேலும், தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரா தப்பட்டை' விஷால் நடிப்பில் வெளியான 'மருது' போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான 'பில்லா பாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தினை விஜய் நடிப்பில் வெளியான 'சர்க்கார்' படத்திற்கு போட்டியாக வெளியிறிருந்தார் ஆர் கே சுரேஷ். ஆனால், பில்லா பாண்டி படம் பெரும் தோல்வி அடைந்தது.
இதையும் பாருங்க : தடுப்பூசி போட்ட போதே ஏற்பட்ட Side Effect பற்றி அன்று போட்ட பதிவு - தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள பிக் பாஸ் 3 பிரபலம்.
இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் ஆர் கே சுரேஷ். தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஆர் கே சுரேஷ் 'வன்முறை' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஆர் கே சுரேஷ் போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலை மெருகேற்றியுள்ளார். இந்த படத்தினை மஞ்சித் திவாகர் என்பவர் இயக்கியுள்ளார்.
https://twitter.com/PRO_Priya/status/1427266802933932039
இந்த படத்தை தொடர்ந்து ஆர்கே சுரேஷ் பத்மகுமார் என்பவர் இயக்கும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை இயக்குனர் பாலா தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்கே சுரேஷ் பிளாஷ்பேக் காட்சிக்காக 22 கிலோ உடலை ஏற்றி 105 கிலோவிற்கு உடலை மாற்றி இருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் இவர் படு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுவரை திரைப்படங்களில் முரட்டு தனமான லுக்கில் நடித்த இவர் தற்போது படு மாடர்ன் லுக்கிலும் அசத்தியுள்ளார்.





