தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பை தடுக்க ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை 26 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டைவிட்டு வெளி வர முடியாமல் இருக்கின்றனர். மீறி வந்தால் அவர்களை போலீசார் வெளுத்து வாங்கி விடுகிறார்கள்.

Advertisement

பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி எப்படி பொழுதை கழிப்பது என்று பல்வேறு வீடியோகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சன் மியூசிக் தொகுப்பாளினியான மணிமேகலை தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் கிராமத்தில் சிக்கி இருக்கிறாராம். கொரோனா பாதிப்பால் பல்வேறு மாவட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சொந்த ஊரான சென்னைக்கு திரும்ப முடியாமல் இருக்கிறார் மணிமேகலை.

இதுகுறித்து சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் மணிமேகலை. மேலும், கிராமத்தில் இருப்பதால் அங்கே செல் போன் சிங்னல் சரியாக கிடைக்கவில்லையாம். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான தாயம் எனப்படும் விளையட்டை விளையாடி பொழுதை கழித்து வருகிறாராம் மணிமேகலை.

Advertisement

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்டர்நெட் ஒழுங்கா கிடைக்காம அப்பப்போ மக்கர் பண்ணுது, இந்த கிராமத்துல. அதனால pubgயை கழட்டி விட்டுட்டு. இந்த கேம் மாறிட்டேன். கூட விளையாட எல்லாரும் ஒரே ஃபேமிலி தான். அவங்க வீட்ல தான் இருக்கேன். இந்த விளையாட்டு நல்லா தான் இருக்கு ஆனா, எனக்கு தான் விளையாட தெரியல. இது இன்னும் 20 நாட்கள் எப்படி ஓட்டுவது ன்னு தெரியல என்று பதிவிட்டுள்ளார்

Advertisement
Advertisement