கார்,பைக்,பாரின் டூர் என்று சுற்றி வந்த மணிமேகலை.கைவிட்ட விஜய் டிவி,தற்போது வறுமையில் வாடுவதாக புலம்பல்.

0
617
- Advertisement -

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை பணக்கஷ்டத்தில் இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் இவர் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

-விளம்பரம்-
manimegalai

இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. மேலும், இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இருந்தாலும் அந்த படங்களெல்லாம் இவருக்கு எதிர்பார்த்து அளவிற்க்கு வெற்றி கொடுக்கவில்லை.இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

மணிமேகலை குறித்த தகவல்:

மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதோடு திருமணத்திற்கு பிறகு மணிமேகலை பினான்சியல் ஆக ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார். அப்போதுதான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்தது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் உசேனுடன் கலந்து கொண்டு இருந்தார். இதில் இவர்கள் இரண்டாம் பரிசையும் வென்றிருந்தார்கள்.

அதைத்தொடர்ந்து தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வாய்ப்பு கிடைத்தது. இதுவரை இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்திருக்கிறது. நான்கு சீசன்களிலும் மணிமேகலை கோமாளியாக வந்திருக்கிறார். பின் திடீரென்று கடந்த நான்காவது சீசனில் மணிமேகலை, இனி நான் கோமாளியாக வரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியாக இருந்தது.

-விளம்பரம்-

யூடியூப் சேனல்:

பலருமே மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் இவர் வரவில்லை? என்றெல்லாம் கூறியிருந்தார்கள். ஆனால், உண்மையில் மணிமேகலை கர்ப்பம் எல்லாம் இல்லை. இன்னொரு பக்கம், இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியிருந்தார்கள். அதில் இவர்கள் பதிவிடும் எதார்த்தமான வீடியோக்கள் பார்வையாளர்களை கவர, இவர்களது யூடியூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. யூடியூப் மூலமே இவர்களுக்கு மாதம் பல லட்சம் வருமானம் கிடைத்தது. பின் மணிமேகலை நன்றாக சம்பாதித்து இரண்டு கார், வீடு என்றெல்லாம் வாங்கிவிட்டார்.

manimegalai

மணிமேகலை தற்போதைய நிலை:

தற்போது கிராமத்தில் இவர் பிரம்மாண்டமாக ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டு வருகிறார். மேலும், சமீப காலமாகவே மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியிலுமே கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மணிமேகலை பணக்கஷ்டத்தில் இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இவர் தன்னுடைய வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியாத நிலையில் இருப்பதாக தன்னுடைய youtube சேனலில் கூறியிருக்கிறார். மணிமேகலின் இந்த நிலைமையை கண்டு ரசிகர்கள் பலருமே, என்னாச்சு? விஜய் டிவி உங்களை கைவிட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement