சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த சன் மியூசிக் பிரபலம் – வைரல் புகைப்படம்.

0
623
ananya
- Advertisement -

சமீப காலமாகவே வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னதிரை நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகி வருகிறது. பொதுவாகவே பிரபலங்களின் திருமணங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான, ஸ்பெசலான செய்தி. அப்படி தான் சமீபகாலமாக தொலைக்காட்சி பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
Kattam Enna Solluthu | Horoscope for this week | Vanakkam Sun Music | 17th  Aug 2020 - YouTube

மேலும், மதன் -ரேஷ்மா, சபானா- ஆர்யன், ஸ்ரேயா-சித்து ஆகியோருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதே போல் நேற்று பாலிவுட்டின் டாப் நடிகை கத்ரீனா கைஃப் திருமணமும் பிரம்மாண்டமாக ராஜஸ்தானில் நடந்தது. இது குறித்து சோசியல் மீடியா முழுவதும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தது. அதே போல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான நக்ஷ்த்ராவுக்கு நேற்று தான் திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இன்று பிரபல தொகுப்பாளினிக்கு திருமணம் நடந்து உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க, நம்ம சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் அனன்யா தான். தமிழ் தொலைக்காட்சகியில் மிகப் பிரபலமான பாட்டு சேனலாக திகழ்வது சன் மியூசிக். சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் தான் வழங்கி வருகிறது. 2004 ஆம் ஆண்டு ஆண்டிலிருந்து இந்த சன்மியூசிக் இயங்கி வருகிறது.

இந்த சன் மியூசிக் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதில் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் அனன்யா. அவருக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. அவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement