Iplல இது கிடைக்கும்னு தான் கிரிக்கெட் வீரர கல்யாணம் பண்ணேன் - Vj தியா சொன்ன சீக்ரெட்.

By Rajkumar · 10/10/2021

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டது ஏன் என்று பிரபல தொகுப்பாளினி தியா கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான 'சன் டிவி'-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒரு காமெடி கேம் ஷோ ஒளிபரப்பானது. அந்த காமெடி கேம் ஷோ தான் 'சூப்பர் சேலஞ்ச்'. இந்த 'சூப்பர் சேலஞ்ச்' கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சன் டிவிலையே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ 'சவாலே சமாளி'.

2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த ஷோவையும் தியா மேனன் தான் தொகுத்து வழங்கினார்.2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன். திருமணத்திற்கு பின்னர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினாலும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்தார் தியா.

இதையும் பாருங்க : நமீதா வெளியேறிய நிலையில் கன்பெஷன் ரூமில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரின் தோழி. யார் பாருங்க ?

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பாடல் நடனம் என்று பன்முக திறமை கொண்டவர் தியா. விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில் இடம்பெற்ற ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில பாடல்களை பாடியுள்ளார். 2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன்.

https://twitter.com/chettyrajubhai/status/1441597835988783113

இதனால் கொஞ்சம் டிவி பக்கம் வரமால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தியாவிடம், கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ipl டிக்கெட் பிரீயா கிடைக்கும்னு தான் கிரிக்கெடரை கல்யாணம் பண்ணேன் என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full