நமீதா வெளியேறிய நிலையில் கன்பெஷன் ரூமில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரின் தோழி. யார் பாருங்க ?

0
7597
mila
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மற்றொரு திருநங்கை கலந்துகொள்ள இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது.அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

கடந்து வந்த பாதை டாஸ்க்கில் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், பெற்றோர்களால் அனுபவித்த கொடுமைகள் பற்றி எல்லாம் சொல்லி இருந்தது பலரையும் கண் கலங்க வைத்தது. இப்படி ஒரு நிலையில் இவர் நேற்றய நிகழ்ச்சியில் இவர் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார்.

இதையும் பாருங்க : ‘நமீதாக்கு நடந்த விஷயம்’ – நமீதா மாரிமுத்து குறித்து முன்னாள் போட்டியாளர் சனம் சொன்ன விஷயம்.

- Advertisement -

நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் கன்பேஷன் ரூமில் அமர்ந்து இருப்பது போல ஷகீலாவின் திருநங்கை மகள் மிளா அமர்த்திருப்பது போல ஒரு புகைப்படத்தை பதவிடுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பலர் நமீதாவிற்கு பதிலாக மிளா பிக் பாஸ்ஸிற்கு செல்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்னரே திருநங்கை ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அப்போதே மிளாவின் பெயர் அடிபட்டது. ஆனால், அவர் இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. மேலும், இந்த புகைப்படம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பிக் பாஸ் வீட்டை சுற்றிப்பார்க்க சென்ற போது எடுத்த புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement