இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) 'சர்கார்' படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், தற்போது விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இன்னும் தொடர்ந்து 5 நாட்களுக்கு 'சர்கார்' படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிடப்போவதாகவும். தினமும் ஒரு புகைப்படம் என்று தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. சமீபத்தில் அஜித் நடித்துவரும் 'விஸ்வாசம் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதையடுத்தே விஜய்யின் 'சர்கார்' படத்தின் இசை வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.Get a behind the scenes look at the making of #Sarkar ! From tomorrow, we will be releasing one working still from #Sarkar, every day for the next 5 days. #SarkarWorkingStills pic.twitter.com/jejLpAaMPT
— Sun Pictures (@sunpictures) August 25, 2018
சினிமாReading time · 1 min





