7 வருடங்களுக்கு மேல் ஓடிய சன் டிவி சீரியலுக்கு திடீர் எண்டு கார்ட் – இல்லத்தரசிகள் கவலை.

0
871
chandralekha
- Advertisement -

பல வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வந்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதுவும் கொரோனா காலகட்டத்திலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சீரியல்களை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன முன்னணி சேனலாக விளங்குவது சன் டிவி. இந்த தொடரில் பல மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி குடும்பங்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் சந்திரலேகா.

- Advertisement -

சந்திரலேகா சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

இந்த தொடரில் 2014ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, ஜெய் தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து வருகிறது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இந்த கதையின் நாயகி சந்திரா.

சந்திரலேகா சீரியல்:

சந்திரா மற்றும் லேகா இருவரும் ஆரம்பத்தில் எதிரிகளாக இருந்தாலும் பின் தன் குடும்பத்திற்காக மாறிவிட்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு இருவரின் கணவர்களும் துணையாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சந்திரலேகா சீரியல் கதை:

இருந்தாலும், இடையில் சீரியல் கொஞ்சம் டல்லாக சென்றதால் பலரும் சீரியல் எப்போதும் முடியப்போகிறது என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். அதோடு சீரியலில் பல பிரபலங்கள் மாறி இருந்தாலும் கதை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. அதுட்டுமில்லாமல் சந்திரலேகா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

சந்திரலேகா சீரியல் முடிவு:

இந்த சீரியல் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் 2250 க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து இருக்கிறது. தற்போது சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதனால் சந்திரலேகா சீரியல் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement