சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஜோதி சீரியல் பற்றி தெரியுமா ? ஏற்கனவே இந்த டிவியில் வந்த சீரியல் தான் இது.

0
2707
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.

-விளம்பரம்-

அதே போல கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சீரியல் படபிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.ஆனால், தற்போது சீரியல் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறம் பல்வேறு சீரியல்களில் கொரோனா தொற்றோடு சில நடிகர் நடிகைகள் நடித்தது தான் கொடுமை. அதுவும் சன் டிவி சீரியல்கள் பல கொரோனா ஊரடங்கிற்கு நடுவே கூட நடந்து.

இதையும் பாருங்க : காதலை ஏற்காததால் இளைஞர் தற்கொலை. லைவில் அனிகா சொன்ன ஷாக்கிங் தகவல்.

- Advertisement -

அதிலும் அன்பே சீரியலில் நடித்து வந்த ஹீரோ – ஹீரோயின் இருவருக்குமே கொரோனா தொற்று இருந்த போதே படப்பிடிப்பு நடந்தது. இதுகுறித்து டெக்னிஷன் ஒருவர் பேசிய ஆடியோ கூட சமீபத்தில் வைரலானது. தற்போது முழு ஊரடங்கள் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் பல சேனல்கள் பழைய சீரியல்களை ஒளிபரப்ப துவங்கி இருக்கிறது.

Jyothi - Ep 02 | 13 April 2021 | Gemini TV Serial | Telugu Serial - YouTube

இப்படி ஒரு நிலையில் சன்டிவியில் ஜோதி என்ற புதிய சீரியல் வரும் மே 29 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஆனால், இது டப்பிங் சீரியல் தான். இந்த சீரியலை ஏற்கனவே சன் டிவி ஒரு 25 எபிசோடுகள் ஒளிபரப்பி பின்னர் நிறுத்தியது. மேலும், இந்த சீரியல் ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement