இது உண்மையிலேயே உங்க ஐடி தானா ? சந்தேகத்துடன் கேட்ட ரசிகர், லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயசாரதி.

By Rajkumar · 2/8/2021

ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜய் சாரதி. ஊர் ஊராக சென்று அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன பாடல் பிடிக்கும் என்று பேட்டி எடுத்து டிவியில் போடுவார் விஜய் சாரதி. அப்படி பேட்டி எடுக்க செல்லும் போது பேசிக்கொண்டே நேராக நடக்காமல் பின்னால் நடந்து செல்வார். பலருக்கும் இந்த ஷோ ஒரு பேவர்ட் ஷோ'வாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சாரதி ஒரு படித்து முடித்த பட்டதாரி ஆவார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக சன் டிவியில் ஒரு ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார்.அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி.

இதையும் பாருங்க : சர்பாட்டா பற்றி பக்கம் பக்கமாக எழுதி பாராட்டிய அட்லீ - வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி கண்டுள்ளார் விஜய் சாரதி.நிகழ்ச்சி பெரிதாக வளர்ந்து இவரது திறமையை கண்ட சன் டிவி நிர்வாகம் இவரை சேனல் ஹெட்'ஆக நியமித்தது. தற்போது சன் டிவியில் நிர்வாக வேலைகள் அதிகமாக இருப்பதால் நீங்கள் கேட்ட பாடல் போன்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலையில் உள்ளார் விஜய் சாரதி.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். தற்போது விஜயசாரதி இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்துள்ளாராம். இந்த நிலையில் இவரது ட்விட்டர் கணக்கில் ரசிகர் ஒருவர் உண்மையில் இது விஜயசாரதி கணக்கு தானா என்று கேட்க, ரஜினியுடன் பல ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தையும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு, வேகமாகவும் பின்னால் நடந்து கொண்டும் பேசும் அதே விஜயசாரதி தான் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full