சர்பாட்டா பற்றி பக்கம் பக்கமாக எழுதி பாராட்டிய அட்லீ – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1951
atlee
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பல்வேறு பிரபலங்களும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரான அட்லீ, இந்த படத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதி பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால், இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வச்சி செய்து வருகின்றனர். உன்கிட்ட அண்ணாவ வச்சி எடுக்குற அளவுக்கு கத இருக்கலாம் ஆனா அதுக்காகலாம் சார்பாட்டா மாதிரி ஒரு சொந்த படம் எடுத்துற முடியாது என்று ஒருவர் கமன்ட் செய்துள்ளார். இன்னொருவரோ, அடுத்து என்ன? விஜய் வச்சு ஒரு பாக்சிங் (திருட்டு கதை) படமா என்று கமன்ட் செய்துள்ளார்.

இன்னொரு ரசிகர், இந்த மாதிரி சொந்தமா ஒரு படம் எடுக்க முடியுமா உன்னால என்று கேலியாக பதிவிட்டுள்ளார். அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது. ஆனாலும், 7 ராகம் தான் 7 ஸ்வரம் தான் அதனால் எந்த படம் எடுத்தாலும் அது ஒரு படத்தோட காபி மாதிரி தான் இருக்கும் தான் எடுக்கும் படங்கள் தன்னுடைய சொந்த கதை தான் என்று தத்துவம் பேசுவார் அட்லீ.

Advertisement