சன் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் ? அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா ? இதோ லிஸ்ட்.

0
2792
SuntvSerials
- Advertisement -

சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கின்றது. இதனால் வித்தியாசமான கதைகளத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கிறது. சொல்லப்போனால், தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சன் டிவி இருக்கிறது. மேலும், டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை சன் டிவி வெளியிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா, வானத்தைப்போல போன்ற பல தொடர்கள் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தையும் பிடித்திருக்கிறது. மேலும், இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து வருகிறார்கள். தற்போது பல சேனல்களில் சீரியல்கள் புதுசு புதுசு வந்தாலும் சன் டிவிக்கு என்றே ஒரு தனி மவுஸ் இருக்கிறது. இந்நிலையில் சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மதுமிதா:

சன் டிவியில் டிஆர்பி உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் தான் இந்த சீரியலின் கதாநாயகி. இவர் கன்னட நடிகை ஆவார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு சீரியல் நடித்து வருகிறார். இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

கேப்ரில்லா செல்லஸ்:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் சுந்தரி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகியாக சுந்தரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் கேப்ரில்லா. இவர் டிக் டாக் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரீல்ஸ் வீடியோ, நடனம் என்று சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இதன் மூலம் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும், இவரை சுந்தரி சீரியல் தான் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி இருக்கிறது. இவர் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

-விளம்பரம்-

ஆல்யா மானசா:

சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஆல்யா மானசா. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். இவர் முதன்முதலாக ராஜா ராணி தொடரில்தான் நடித்திருந்தார். தற்போது இவர் சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் ஒரு நாளைக்கு இவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ஸ்ருதி ராஜ்:

தென்றல் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஸ்ருதி ராஜ். இவர்
சீரியலில் வருவதற்கு முன்பு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் தாலாட்டு சீரியலில் நடித்திருக்கிறார். இவர் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

சைத்தா ரெட்டி:

தற்போது இளைஞர்களின் பேவரட் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி. இவர் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து தற்போது கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

Advertisement