சென்னையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த பூர்வீக வீட்டை வாங்கிய பிரபல தமிழ் நடிகர் – யார் தெரியுமா ?

0
2038
- Advertisement -

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை பிரபல நடிகர் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுந்தர் பிச்சையை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். Google நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு அசோக் நகர் பகுதியில் சொந்தமாக பூர்வீக வீடும் இருக்கிறது.

-விளம்பரம்-

சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது படித்து முடித்தது எல்லாமே இங்கு தான். இவர் கரக்பூர் ஐஐடி மற்றும் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மேற்படிப்பை முடித்திருக்கிறார். அதற்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்து சுந்தர் பிச்சை பணியாற்றினார். தற்போது இவர் கூகுள் நிறுவன சிஇஓவாக பதவி வகித்து வருகிறார். அந்த அளவிற்கு பிரபலமான நபராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

- Advertisement -

சுந்தர் பிச்சை பூர்வீக வீடு:

தற்போது அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவர் தன்னுடைய 20 வயது வரை தான் இந்தியாவில் இருந்தார். அதற்குப்பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை பிரபல நடிகர் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சுந்தர் பிச்சைக்கு சென்னையில் சொந்தமாக உள்ள பூர்வீக வீட்டை தற்போது அவருடைய தந்தை விற்பனை செய்திருக்கிறார்.

மணிகண்டன் அளித்த பேட்டி:

இதை நடிகரும் தயாரிப்பாளருமான சி மணிகண்டன் வாங்கி இருக்கிறார். மேலும், இது குறித்து மணிகண்டன் கூறியிருப்பது, சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என்று தெரிந்ததுமே அதை வாங்க முடிவு செய்தேன். சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து இதுதான். அவர் பெயரில் தான் வீடு இருக்கிறது. அவர் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வீட்டை வாங்குவதற்கான பணிகளை முடிக்க நான்கு மாதங்கள் ஆனது.

-விளம்பரம்-

சுந்தர் பிச்சை இடத்தில் செய்ய இருப்பது:

பின் சுந்தர் பிச்சையின் தந்தை சென்னை வந்தவுடன் அவர் என்னிடம் வீட்டு ஆவணங்களை ஒப்படைத்து விட்டார். பத்திரபதிவு அலுவலகத்தில் அனைத்து வரிகளையும் செலுத்தி எல்லா பணிகளையும் சிறப்பாக முடித்த பிறகு சுந்தரியின் தந்தை அங்கிருந்து சென்றார். இது அவருடைய முதல் சொத்து என்பதால் என்னிடம் ஒப்படைக்கும் போது சில நிமிடங்கள் கண் கலங்கினார்.

சுந்தர் பிச்சை வீடு:

நான் இப்போது சுந்தர் பிச்சை வீடு இருந்த இடத்தில் புதிதாக வில்லா ஒன்று கட்ட முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும், சுந்தர் பிச்சை அவர்கள் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 31.17 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 40 மில்லியன் டாலருக்கு சுந்தர் பிச்சை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement