சுந்தரி சீரியல் நடிகைக்கு சிம்பளாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம், மாப்பிளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

0
73
- Advertisement -

சுந்தரி சீரியல் நடிகைக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் உடையவள். ஆகவே, நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் இடம் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. மேலும், இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார்.

- Advertisement -

சுந்தரி சீரியல்:

தற்போது இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக செல்கிறது. மேலும், சுந்தரி சீரியலில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீ கோபிகா சந்திரன். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இது மட்டுமில்லாமல் இவர் உயிரே என்ற சீரியலும் நடித்திருந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்த 90 எம்எல் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரீ கோபிகா சந்திரன் குறித்த தகவல்:

அதற்குப் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார் இருந்தாலும் இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்து விட்டார். பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த அன்பே வா சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு ஓளிபரப்பாகி இருந்தது. இடையில் இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் காரணமின்றி வெளியேறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அன்பே வா சீரியல்:

இருந்தாலும், இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இது ஒரு பக்கம் இருக்க, ஸ்ரீ கோபிகா சந்திரன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சமீப காலமாகவே இவர் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோ எடுத்து வருகிறார். அதிலும் இவர் நீச்சல் குளத்தில் இருந்த கிளாமர் புகைப்படம் படு வைரலாகி இருந்தது.

கோபிகா நிச்சயதார்த்தம் :

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இவர் நடிகர் சைவாக் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவருமே எட்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கூடிய விரைவிலேயே திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்களுடைய நிச்சயதார்த்த போட்டோஷூட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement