சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா புது பிசினஸ் தொடங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார்.

அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா.
கேப்ரில்லா குறித்த தகவல்:
இந்த படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து இருக்கிறார். அதோடு இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் தொடங்கிய நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

சுந்தரி சீரியல்:
எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.
கேப்ரில்லா நடித்த படம்:
மேலும், இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் கேப்ரில்லா. பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கிலும் டாப் 5ல் இருக்கிறது. இன்னொரு பக்கம் இவர் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் N4. இந்த படத்தில் மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், கேப்ரில்லா, அழகு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
View this post on InstagramA post shared by Gabriella sellus (@gabrellasellus_official)
கேப்ரில்லா புது பிசினஸ்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கேப்ரில்லா தொடங்கியிருக்கும் புது பிசினஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கேபி தியேட்டர் பேக்டரி என்ற நடிப்பு பள்ளி ஒன்றை கேப்ரில்லா தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் பலருக்குமே நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து சோசியல் மீடியாவில் அவர், ரசித்த கலையை பகிர்வதில் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.





