தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான் இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முன்பாகவேய தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் சந்தீப்.

இந்த நிலையில் தான் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் “மைக்கேல்”. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, கெளதம் மேனன், வரலட்சிமி சரத்குமார் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். இதனால் படத்திற்கான ஆவலும் அதிகமாகி இருந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகி இருகிறது. இந்த படத்திற்கு விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ப்ரோமோஷன் செய்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை காணலாம் வாருங்கள்.

Advertisement

கதைக்களம் :

தன்னுடைய தாய்க்கு துரோகம் செய்த தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கில் என்கிற சந்தீப் கிஷான். இவர் தந்தையை தேடி அலையும் வேலையில் பிரபல மும்பை தாதாவான கௌதம் மேனனை சந்திக்கிறார். அந்த சமயம் கௌதம் மேனனை கொள்ள வரும் ஒருவரிடம் இருந்து காப்பாற்றிய மைக்கில் அவரிடம் சில ஆண்டுகள் வாழ்கிறார். பின்னர் கௌதம் மேனனை கொள்ள முயற்சி நடக்கும் போது அவரை காப்பாற்றி அவருடைய நம்பிக்கையுள்ள அடியாட்களில் ஒருவராக ஆகினார்.

பின்னர் தன்னை கொல்ல திட்டமிட்ட நபர்களில் ஐந்து பேரை கௌதம் மேனன் கொன்றுவிட்ட நிலையில் அந்த ஆறாவது நபரையும் அவரது மகளையும் கொள்ளும் பொறுப்பை மைக்கிலிடம் ஒப்படைக்கிறார். ஆனால் கொள்ள சென்ற இடத்தில் காதல் வரவே மைக்கிலை அடித்து துப்பாக்கியால் துட்டு கடலில் தூக்கி வீசுகின்றனர். இப்படி வீசப்பட்ட அவர் மீண்டும் அவருடைய காதலியுடன் இணைகிறாரா? மைக்கில் என்பவர் யார்? அவர் மும்பை வந்த காரியம் சரியாக முடிந்ததா என்பது தான் மீதி கதை.

Advertisement

இப்படத்தில் கதாநாயகனாக வரும் சந்தீப் கிஷான் தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா நடிப்பு சரியில்லை. எப்போதும் போல மாஸ் வில்லனாக கவுதம் மேனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் வரலட்சிமி சரத்குமார் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கின்றனர். மேலும் கதைக்கு தேவையான மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு பொருந்தி இருக்கின்றனர். திரைக்கதை பிரமாதமாக இருந்தாலும் சில இடங்களில் சறுக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயக்கொடி.

Advertisement

குறை :

ஆக்ஷ்ன் படத்திற்க்கான விறுவிறுப்பு இல்லை.

கதாநாயகி நடப்பு சொதப்பல்.

நிறை :

படத்தில் ஹீரோவாக வரும் சந்தீப் கிஷான் மற்றும் வில்லன் கவுதம் மேனன் நடிப்பு பிரமாதம்.

நல்ல கதைக்களம்.

பின்னணி இசை ஓகே.

மொத்தத்தில் ஒரு வீட்டில் உள்ள கதாநாயகன் மற்றும் வில்லன் வலுவாக இருந்தாலும் அந்த வீட்டிற்கு குடியேற வரும் கதாநாயகி சொதப்பி விட்டார்.

Advertisement