விஜய் 62-ல் இந்த பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா..? வெளிவந்த உண்மை தகவல்..!

0
997
Actor viajy 62

இளையதளபதி விஜய் நடித்து வரும் அவரது 62வது படம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. கடத்த மாதம் முழுவதும் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்காள் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கபட்டது. இந்நிலையில் ஸ்ட்ரைக் சில நாட்களுக்கு முன்னர் வாபஸ் வாங்கப்பட்டு தற்போது அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் மும்மரமாக நடைபெற்றுவருகிறது.

nivethitha

மேலும் விஜய் நடித்து வரும் படத்தை எப்படியாவது இந்த தீபாவளிக்கும் முடித்துவிட வேண்டும் என்று படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளி நிவேதிதா இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகிவந்தன.

அனால் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் நிவேதிதா. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுபற்றி பேசிய நிவேதிதா “சமீபத்தில் நாங்கள் இருந்த இடத்தில் விஜயின் 62 படத்தின் படப்பிடிப்பு நடந்ததால் விஜய்யை சந்திக்க நான் அங்கு சென்றேன். மத்தபடி எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது, விஜய்யை சந்தித்ததே எனக்கு பெரும் சந்தோசம் அதற்காக மட்டுமே நான் அந்த படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன்” என்று தெரிவித்திருந்தார்.நிவேதிதா சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பின்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.