படத்தில் சொன்ன நம்பர் உண்மை என்று நம்பி போன் செய்த ரசிகர்கள்.! நம்பரின் உரிமையாளர் செய்த செயல்.!

By Rajkumar · 2/8/2019

ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : நயன்தாரா, திரிஷா கூட இவ்ளோ சீன் போட மாட்டாங்க.! ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி படத்திலும் கமிட் ஆகி இருந்தார். மேலும், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சன்னி.

இந்தியில் இவர் சமீபத்தில் 'அர்ஜுன் பாட்டியாலா' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் சன்னி லியோன் தனது போன் நம்பர் ஒன்றை கூறுவது ஒரு காட்சி அமைக்கபட்டிருந்தது. ஆனால், உண்மையில் அது சன்னி லியோனின் நம்பர் தான் என்று ரசிகர்கள் பலரும் அந்த நம்பருக்கு போன் செய்துள்ளனர்.

ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனனர். சுமார் 400-க்கும் அதிகமான போன் கால்கள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த நம்பருக்கு சொந்தமான புனித் அகர்வால் என்ற டெல்லியைச் சேர்ந்த இளைஞர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த தகவலை அறிந்த சன்னி லியோன் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full