அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 63’ படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையாத நிலையில் இந்த படத்தின் வியபாரம் சூடு பிடித்துள்ளது. தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் ரெயிட்ஸ்ஸை சன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்திற்கு முன்பு விஜய்-அட்லி காம்பினேஷனில் உருவான ‘மெர்சல்’ படத்தின் சேட்டிலைட் உரிமை ரூ.19 கோடியும் டிஜிட்டல் உரிமை ரூ.9 கோடியும் சேர்த்து மொத்தம் 28 கோடி ரூபாய்க்கு ஜீ தமிழ் சேனல் விலைக்கு வாங்கியது. அடுத்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை சன் டிவியே தயாரித்தது.

இதையும் படியுங்க : யாஷிகா பதிவிட்ட மோசமான புகைப்படம்.! அதிகம் பேர் பதிவிட்ட கமன்ட் இது தான்.! 

Advertisement

இப்போது ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் வெளிவரும் ‘விஜய்-63’ படத்தின் சேட்டிலைட் உரிமையை மட்டும் 28 கோடி ரூபாய் விலை கொடுத்து சன் டிவி வாங்கி இருக்கிறது. இன்னும் டிஜிட்டல் உரிமை விற்கப்பட வில்லை. விஜய்-63 படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை. அதற்குள்ளாகவே ரூ.28 கோடி கொடுத்து சேட்டிலைட் உரிமை மட்டும் வாங்கியுள்ளது சன் டிவி.

ஏற்கனவே இந்த படத்தின் வட மாநில அணைத்து உரிமைகளையும் நடிகர் ஷாருக்கானுக்கு தாரை வார்த்துள்ளார் அட்லீ. ஷாருக்கான் இந்த படத்தில் ஒரு 15 நிமிடம் வில்லனாக நடிக்க இருக்கிறாராம் அதற்காக சம்பளத்தை இப்படி அட்ஜஸ்ட் செய்துள்ளார் அட்லீ.

Advertisement
Advertisement