சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் டிவியில் நடத்தி வந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை ஆல் டைம் ஃபேவரட் ஷோ என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். மேலும், 22 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் சுரேஷ்.

Top 10 Movies சுரேஷ் :

இவர் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். 90 களில் பேவரைட் தொகுப்பாளர் என்றால் இவரை தான் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சுரேஷ். தற்போது சுரேஷ் குமார் அவர்கள் நெட்ப்ளிக்ஸ் டாப் 10 என்ற நிகழ்ச்சியை நெட்ப்ளிக்ஸ்க்காக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்திருந்த பேட்டியில் யூடியூபில் சொல்லப்படும் சினிமா விமசனங்களை குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய கருத்தை கூறியிருந்தார்.

Advertisement

விமர்சனம் என்பது நீதிமன்ற தீர்ப்பு :

அவர் அந்த பேட்டியில் கூறியதாவது `விமர்சனம் என்பது நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்வதை போன்றது, என்னேற்றால் அந்த அளவிற்க்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெற்றால் அங்கே பாதிக்கப்பட கூடியது ஒரு குற்றவாளி. ஆனால் இங்கே பாதிக்க படக்கூடயவர் பல தொழிலாளிகள். எனவே சினிமாவை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல் அதன் பின்னர் இருக்க கூட பல குடும்பங்களை பார்க்க வேண்டும். அவசரத்தில் எதையும் செய்து விட முடியாது.

பொறுப்பு வேண்டும் :

அதே போன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு படத்தை கேவலமாக சொல்லி முடிப்பதோ அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு வளர்த்து விடுவதோ தவறானது. மருத்துவம், ஆசிரியர் போன்ற மற்ற எல்லா துறைகளும் போலவே மீடியாவுக்கு அதிகமான அளவிற்கு பொறுப்பு இருக்கிறது. அந்த வகையில் விமர்சனம் மற்றும் செய்தி என்பது வெகு விரைவாக கொடுக்க வேண்டும் ஆனால் அவசரப்பட்டு காலில் சசுடுதண்ணீரை ஊற்றியது போன்று சொல்வது பார்ப்பதற்க்கு ஜாலியாக இருக்கலாம். ஆனால் அது அப்படம் தொடர்பானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Advertisement

படம் ஓடாததற்கு காரணம் :

இப்போது சில படங்கள் வெளியிடுவதற்கு பயப்படுவதே இந்த மாதிரியான விமர்சங்களை பார்த்துதான். முன்னர் நான் விமர்சனம் சொல்லும் போது ஞாயற்று கிழமைகளில் நான் சொன்ன விமசனத்தை கேட்டு படத்திற்கு சென்ற நபர்கள் இருக்கின்றனர். ஆனால் அப்போது கூட படம் வெளியாகிய வாரமே விமர்சனம் சொல்ல மாட்டோம். அவற்றை புது வரவு என்றுதான் சொல்லுவோம். ஓடாத படங்கள் சில ஒட்டியிருக்கின்றன எங்களுடைய விமர்சன காலத்தில். ஆனால் இப்போது ஓடும் படங்களே ஓடாமல் இருக்கிறது இப்போதுள்ள விமர்சகர்களினால்.

Advertisement

வாய்க்கு வந்ததை சொல்ல கூடாது :

நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒவ்வொரு விமர்சகரும் திரைத்துறையை ஏதவது ஒரு தொழில்நுட்பத்தை ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டுட்டு சும்மா படத்தை பார்த்து விட்டு விமர்சனம் சொல்வதை தவிர்த்து, அந்த படத்தின் கதையா கருத்தை எடுத்து இந்த மாதிரியான படம் விருப்பம் உள்ளவர்கள் போகலாம் என்று சொல்லவேண்டும். அதை தவிர்த்து வாய்க்கு வந்ததை முன் கேமெரா வைத்து கொண்டு மொக்கை என்று சொல்லி மட்டம் தட்ட கூடாது. அதனை பார்வையாளர்கள் நம்பவும் மாட்டார்கள் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் சினிமா விமர்சகர் டாப் 10 மூவிஸ் சுரேஷ்குமார்.

Advertisement