சத்தமில்லாமல் முடிந்த சூப்பர் சிங்கர் புகழ் சாய் சரண் திருமணம். இவங்க தான் மணப்பெண்.

0
12120
sai
- Advertisement -

கடந்த நான்கு ஐந்து மாதங்களுக்கு மேலாக ஒருவர் பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது ஊரடங்கு உத்தரவை பல்வேறு பிரபலங்களின் திருமண நிகழ்ச்சி கூட மிகவும் எளிமையாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் ஊரடங்கு நடுவே தனது திருமணத்தை முடித்து இருக்கிறார் பிரபல பின்னணிப் பாடகரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் முன்னாள் வெற்றிகரமான சாய்சரண். தற்போது சினிமாவில் பின்னணி பாடகராக இருக்கும் சாய்சரண் தனது சிறு வயதில் இருந்தே சங்கீதத்தை கற்று வருகிறார். மேலும், தனது எட்டாவது வயதிலேயே அரங்கேற்றத்தை ஏற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

பாடகர் சாய் சரண் சன் தொலைக்காட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான சங்கீத மகா யுத்தம் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அந்த நிகழ்ச்சியில் சாய்சரண் இன் குழுவினர் இரண்டாம் இடத்தை பிடித்தார்கள். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கரில் மூன்றாவது சீசன் தான்.தனது 21 வயதில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாய்சரண் இந்த சீசனில் தெய்வீக சுற்றில் பாடிய இசைத்தமிழ் நீ செய்த என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

- Advertisement -

மேலும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 3 இல் வெற்றியாளராகவும் முடிசூட்டப்பட்டார் பாடகர் சாய்சரண். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளர் ஆகவும் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். மேலும் மனம் கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பினை கொடுத்தார் இமான். அதன் பின்னர் சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா, மருது போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார் சாய்சரண்.

இந்தநிலையில் சாய் சேரனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்து இருக்கிறார் சாய்சரண். கொரோனா பிரச்சினை காரணமாக எளிமையாக முடிந்து இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த திருமணத்திற்கு சூப்பர் சிங்கர் போட்டியாளரும் பின்னணி பாடகருமான திவாகரும் சென்று இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement