இப்படி இருந்த ராஜலக்ஷ்மியை இப்படி மாற்றியது அவரோட சொந்தக்கார பொண்ணு இவங்க தான்.

0
3648
rajalakshmi
- Advertisement -

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மிக்கு அறிமுகம் தேவையில்லை. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும்,போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.

-விளம்பரம்-
னது உறவினரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவுடன் ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் லைம் லைட்டாக இருந்து வந்த செந்தில் கணேஷிற்கு தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது ‘கறிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.  மேலும், செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி இருவரும் வெளிநாடு வரை சென்று பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் செந்தில் கணேஷின் மனைவி ராஜலக்ஷி நடத்திய போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்துள்ள ராஜலக்ஷ்மி, எனக்கு மேக்கப் போட்டு விட்டது என்னுடைய சொந்தக்கார பெண் ராதிகா தான். திண்டுக்கல்லில் இருக்கும் உங்க அம்மா வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு நான் மேக்கப் போட்டு விடுகிறேன் என்று சொன்னார்கள். சமீபத்தில் என் அம்மா வீட்டிற்கு நான் சென்ற போது அவர்களுக்கு சரி என்று சொன்னேன்.

மேலும் மேக்கப் போடுவது என்றால் எப்போதும் எனக்கு பயம். அதனால்தான் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கூட நான் அவ்வளவாக மேக்கப் போடுவது கிடையாது. மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நான் அணியும் ஆடைகளில் கூட நான் போட்டோ எடுப்பது கிடையாது. அதனால் வெறும் இரண்டு புடவையை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன். மேலும் சிம்பிளாக மேக்கப் போட வேண்டும் என்னுடைய முகம் மாறக்கூடாது என்று கூறினேன். என்னுடைய ஹேர் ஸ்டைலில் கூட மாற்றம் இருக்கக் கூடாது என்று சொன்னேன். மேலும் என் கணவருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்த போது அடேயப்பா எப்ப நடந்துச்சு இதெல்லாம் வருடம் பொண்ணு பாக்குற இருந்து ஆரம்பிச்சு விரட்டுமா என்று சிரித்தார் என்று கூறியுள்ளார் ராஜலட்சுமி

-விளம்பரம்-
Advertisement