செந்தில் கணேஷ் மனைவி ராஜலக்ஷ்மி நடத்திய போட்டோ ஷூட் – பாத்தா ஷாக்காவீங்க.

0
5967
senthil-ganesh
- Advertisement -

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மிக்கு அறிமுகம் தேவையில்லை. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும்,போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் லைம் லைட்டாக இருந்து வந்த செந்தில் கணேஷிற்கு தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது ‘கறிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.  மேலும், செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி இருவரும் வெளிநாடு வரை சென்று பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பான `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். நிகழ்ச்சியின் எபிசோட் ஒன்றில் இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த இந்த ஜோடியின் புது கெட்அப் வந்த இவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது .இந்த நிலையில் இவரது மனைவி நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை செந்தில் கணேஷ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் எண்ணென்ற கச்சேரிகளில் கலந்து கொண்ட இவர்கள் சம்பீத்தில் தான் தங்களது சொந்த் ஊரில் பெரிய வீடு ஒன்றையும் கட்டினார்கள். அதற்கு சமீபத்தில் தான் கிரகபிரவேசம் கூட நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement