சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மக்கள் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி படு பேமஸ். வருடம் வருடம் சிறியவர்கள், பெரியவர்கள் என தனி தனியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஜூனியர், சீனியர் என அனைத்து தரப்பினருக்கும் சினிமா உலகில் மாபெரும் வாய்ப்பை அள்ளித் தந்து வருகிறது.

மேலும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூவையார். இவர் நடுவர்கள் மட்டுமில்லாமல் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார் பூவையார். இவரை “கானா ராக்ஸ்டார்” என்று தான் அழைப்பார்கள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் இவருடைய வாழ்க்கை பாதை மாறியது என்று சொல்லலாம்.
சூப்பர் சிங்கர் பூவையார்:
மேலும், ஜூனியர் சீசனில் இவர் டைட்டில் பட்டத்தை தட்டி சென்று இருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர் பூவையார். அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த “பிகில்” படம் திரையரங்களில் வேற லெவல்ல தூள் கிளப்பியது. விஜய்யின் பிகில் படத்தில் “வெறித்தனம்” என்ற கானா பாடலை சூப்பர் சிங்கர் பூவையார் பாடி இருக்கிறார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் பூவையார் நடித்து இருந்தார்.

பூவையார் குறித்த தகவல்:
அதுமட்டும் இல்லாமல் பூவையார், இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் ஓன்றில் பாடி இருந்தார். அதை தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த மகாராஜா படத்தில் பூவையார் நடித்து இருந்தார். அதற்குப்பின் இவர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த அந்தகன் படத்திலும் நடித்திருந்தார். இப்படி திரைப் படங்களில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும் என பிஸியாக இருந்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
அதோடு தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக பூவையார் கலந்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து கலாட்டா, கலவரங்கள் என சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் பூவையார் ஹீரோவாக நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Unveiling a tale of raw, battle-hardened boys with untamed spirits.
— Ramesh Bala (@rameshlaus) May 30, 2025
Here’s First Look of Super Singer #Poovaiyar as HERO #RamAbdullahAntony #ராம்அப்துல்லாஆண்டனி
Produced by @avstudios_off @clemsi34
Directed by @DIRJAYAVEL@clemsi34 @vinothseditor @johnsoncinepro @gibsonraj3… pic.twitter.com/toSJivciqW
ஹீரோவாக நடிக்கும் பூவையார்:
அதாவது, பூவையார், ' ராம் அப்துல்லா ஆண்டனி' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய போஸ்டரை தான் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






