சூப்பர் சிங்கர் பிரபலம் ஹர்ஷினி நேத்ராவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியிருந்தது. நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வழக்கம்போல மாணவ, மாணவிகள் 12, 10 ஆம் வகுப்புகளில் அதிகமான மதிப்பெண்களை பெற்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தான் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மேலும், பிரபலங்கள் பலருடைய பிள்ளைகளும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் ஹர்ஷினி நேத்ரா. இவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருக்கிறார். இவர் 500க்கு 384 மதிப்பெண் எடுத்திருக்கிறார்.

Advertisement

ஹர்ஷினி நேத்ரா பேட்டி:

இது குறித்து பேட்டியில் நேத்ரா கூறியிருப்பது, நான் 450 க்கு மேல் மார்க் எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என் பெற்றோர் ஆசைப்பட்டது போல என்னால் மதிப்பெண் எடுக்க முடியவில்லை. இருந்தாலும் இதுவும் ஒரு நல்ல மார்க் என்று நினைக்கிறேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் படிப்பிலும் சமமாக கவனம் செலுத்தினேன். நான் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்து வருகிறேன்.

தேர்வு குறித்து சொன்னது:

பதினோராம் வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுக்க நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்றோருடைய ஆசிரியை நிறைவேற்றவில்லை என்றாலும் கண்டிப்பாக 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவேன் என்று கூறியிருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டியும் வருகிறார்கள்.

Advertisement

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இருப்பது ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

Advertisement

ஹர்ஷினி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஹர்ஷினி நேத்ரா குரலில் பாடிய பாடல்கள் அனைவரையும் வியக்க வைத்தது. இவர் எளிமையான பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு சிறு கடை ஒன்றை நடத்தி வருகிறார். பாடகி வைக்கம் விஜயலட்சுமி மற்றும் பாடகி தீ ஆகியோருடைய குரலில் அச்சு அசலாக அவர்கள் போலவே பாடி அசத்திருக்கிறார் ஹர்ஷினி நேத்ரா.

Advertisement