சூப்பர் சிங்கர் 2 அல்காவை ஞாபகம் இருக்கா – ப்பா, இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. (இறுதி போட்டியில் அவர் பாடிய பாடலை மறக்க முடியுமா ?)

0
426
- Advertisement -

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரபலம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். மேலும், இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : வாய்ப்பு கேட்டு கண்ணீர் விட்டு புலம்பி வந்த பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி.

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி:

அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

அல்கா அஜித்:

இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானாவும், மூன்றாம் இடத்தை நேஹாவும் பெற்று இருந்தார்கள்.
இந்நிலையில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரபலம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, அல்கா அஜித். சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தார் அல்கா அஜித். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

அல்கா அஜித்தின் இசைப்பயணம்:

இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர். அல்கா முறைப்படி சங்கீதம் பயின்றவர். மேலும், இவர் தன்னுடைய இரண்டரை வயதிலேயே மேடையில் பாடிய தொடங்கியவர். அதுமட்டுமில்லாமல் இவர் இந்திப் பாடலை பாடி பலரையும் விழிப்படைய செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையின் விருப்பப்படி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். தன்னுடைய இனிமையான குரலால் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். அதோடு அப்போது சிறப்பு விருந்தினராக வந்த சித்ரா, ஜானகி அம்மா, சுசிலா என அனைவருமே இவரை பாராட்டி இருந்தார்கள்.

வைரலாகும் அல்காவின் புகைப்படம்:

2010ஆம் ஆண்டில் சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்றவர். இதுவரை இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால், இவரை சின்ன திரையில் தான் பார்க்க முடியவில்லை. இருந்தாலும், இசை கச்சேரி, ஆல்பம் என்று அல்கா பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வந்த அல்கா குழந்தையா இது! இவர் இப்போது நன்கு வளர்ந்து விட்டாரே! என்று கூறி அல்காவின் இசை கச்சேரி வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement