தன்னை விட வயது குறைந்த நபருடன் திருமணம் - வருங்கால கணவருடன் லிப் லாக் புகைப்படத்தை பகிர்ந்த சூப்பர் சிங்கர் மாளவிகா.

By Arun · 9/11/2021

தன் வருங்கால கணவருக்கு லிப் லாக் கொடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சூப்பர் சிங்கர் மாளவிகா. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இது சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது. அதிலும் சூப்பர் சிங்கர் என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் பல சீசன்களை கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 8 சமீபத்தில் தான் படு கோலகளமாக நிறைவடைந்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா சுந்தர். தற்போது இவர் பாடலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் பட வாய்ப்பு வந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல் வரை சென்றார்.

இதையும் பாருங்க : என்னது, நாயகன் படத்தில் நடித்த இந்த குழந்தை இந்த பிரபல நடிகை தானா - இது நாள் வரை தெரியாம போச்சே.

ஆனால், மாளவிகா அதில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்டா லைவில் வந்த மாளவிகாவிடம் ரசிகர் ஒருவர் 'உங்கள் கணவர் உங்களை விட வயதில் சிறியவரா ? இல்லை நீங்கள் சிறியவரா ? என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மாளவிகா, என்னைவிட அவர் ஒரு வருடம் இளையவர் அவருக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் வருங்கால கணவருடன் லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மாளவிகா '33 வயதில் எனக்கு சரியான காதல் கதையை கண்டுபிடித்துவிட்டேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full