டைட்டில் வின்னருக்கு கூட கிடைக்காத வாய்ப்பு – சூப்பர் சிங்கர் 8 பிரபலத்துக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.

0
1083
muthusirpi
- Advertisement -

சூப்பர் சிங்கர் முத்து சிற்பி படத்தில் பாடி இருக்கும் பாடல் இன்று வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

மேலும், இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 :

சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானாவும், மூன்றாம் தொடர்ந்து நேஹாவும் பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் முத்துச்சிற்பிக்கு பிரபல இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

முத்துசிற்ப்பி

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் சீசன் 8 சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தவர் முத்துசிற்ப்பி. அந்த சீசனில் இவர்தான் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால், இவருக்கு நான்காவது இடமே கிடைத்தது. இருந்தாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள். இதனை அடுத்து முத்துச்சிற்பி ஏற்கனவே ஒரு சில திரைப் படங்களில் பாடியிருக்கிறார். தற்போது தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகும் ஒரு படத்தில் முத்துச்சிற்பிக்கு பாடும் வாய்ப்பை அளித்து உள்ளார்.

முத்துச்சிற்பி பாடிய பாடல்:

அதாவது சசிகுமார் நடித்த காரி என்ற திரைப்படத்தில் முத்துச்சிற்பி ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை இமான் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே முத்துசிற்ப்பிக்கு பாட வாய்ப்பு அளிப்பேன் என இமான் வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை தற்போது காப்பாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முத்து சிற்பியின் குரலில் உருவாகியிருக்கும் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement