தன் முன்னே மகளுக்கு Pick Up line போட்ட Dj பிளாக் – எச்சரித்த பூஜாவின் தாய். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்பு.

0
1711
pooja
- Advertisement -

டி ஜே பிளாக்கை போட்டியாளரின் அம்மா கடுமையாக திட்டி வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி :

தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடிகளுக்கும், அட்ராசிட்டியும் இவருடைய பங்கு உண்டு. அதிலும் இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இவருடைய காதல் எல்லைக்கு அளவில்லாமல் போய்விட்டது.

-விளம்பரம்-

டிஜே பிளாக்-பூஜா காதல்:

இவர் இந்த சீசன் போட்டியாளர் பூஜாவை காதலிக்கிறேன் என்று அவர் போடும் பாடல்களும் வேற லெவலில் இருக்கும். இதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் அழகாக எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிஜே பிளாக்கை பூஜாவின் குடும்பத்தினர் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வார ப்ரோமோவில் பூஜா தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து அறிமுகம் செய்திருந்தார்.

டிஜே பிளாக்கை வெளுத்து வாங்கிய வீடியோ:

அப்போது டிஜே பிளாக்கும் மேடைக்கு வந்திருக்கிறார். அங்கிருந்த பூஜாவின் அம்மா நீங்கள் செய்வது சரியில்லை. ஒரு பெண்ணை குறித்து இப்படி எல்லாம் பாடல் போடுவதா? எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றெல்லாம் கடுமையாக பேசி இருக்கிறார். இதைக்கேட்டு டிஜே பிளாக்- பூஜா உடன் அரங்கில் இருந்தவர்களும் அதிர்ந்து போய்விட்டார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் பிராங்க் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், இது பிராங்கா? உண்மையா? என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement