இருளர் இன மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக இருளி திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம்.

படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். இந்தப் படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இருந்தாலும் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.

Advertisement

இருளி படம் பற்றிய தகவல்கள்:

அதுமட்டும் இல்லாமல் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான பட்டியலில் ஜெய் பீம் படம் இடம் பெற்று இருந்தது. தற்போது இதே பாணியில் ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகி வருகிறது. மேலும், இருளர்கள் வாழ்க்கையில் ஒரு அருமையான காதல் திரைப்படமாக இருளி உருவாகிறது. இந்த படம் இயக்குனர் மதன் கேப்ரியல் இயக்கத்தில் உருவாக உள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில் ஜெய் பீம் சமீபத்தில் இருளா பழங்குடியினரைப் பற்றி பேசியுள்ளார், ஆனால் அது ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையமாகக் கொண்டது. அவர்களின் வாழ்க்கை முறை பற்றி முக்கியமாக பேசுவதால் எனது படத்தின் கருத்து வித்தியாசமானது.

இருளி படத்தின் நடிகர்கள்:

மேலும், இந்த படத்திற்கு முரளிதரன் கதையை எழுதியுள்ளார். P.B.பாலாஜி இசையில் அ.ப.ராசா பாடல் வரிகளை எழுதுகிறார். இந்த படத்திற்கு செந்தில் கணேஷ், ராஜலஷ்மி, முத்துச்சிற்பி, மும்பை ஹம்சிகா ஐயர், ரோஷினி, விதுயனி பரந்தாமன், சாய் சரன் முதலானோர் பாடுகிறார்கள். வரன் ஒளிப்பதிவு செய்ய இணைப்பதிவை பிரபாகரன் செய்கிறார். இவர்களுடன் இப்படத்தில் செந்தில் கணேஷ் ,ராஜலஷ்மி, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் நடிப்பு பயிற்சி பெற்ற மாணவர்களும் இணைந்து நடிக்கிறார்கள்.

Advertisement

இருளி எதை பற்றிய படம் :

சில தினங்களுக்கு முன்பு மாசிமாக பௌர்ணமி நாளில் கனடாவில் டொரண்டோ நகரில் இந்த படத்திற்கான பாடல் பதிவு நடந்தது. அன்றே சென்னையில் மாமல்லபுரம் கடற்கரையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த படம் குறித்து பேசிய இயக்குனர், இருளி என்றால் கருப்பாக இருப்பவர்கள் என்பதுபொருள். படத்தில் அது பெண் நாயகியைக் குறிக்கிறது, அவள் இருளி மரத்தடியில் பிறந்ததால் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இருளா பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த பெண், கல்லூரிக்குச் செல்கிறாள், ஆனால் அங்கு சக மாணவர்களால் இழிவாகப் பார்க்கப்படுகிறாள்.

Advertisement

செந்திலின் கதாபாத்திரம் :

அவள் கல்வியைத் தொடர முடிகிறதா அல்லது திருமணத்தில் நுழைய ஒப்புக்கொள்கிறாளா? நான் ஒரு ரஷ்ய நாவலில் இருந்து கல்லூரிப் பகுதிக்கான அடிப்படையை எடுத்து இருளாஸின் வாழ்க்கை முறையால் அழகுபடுத்தியுள்ளேன். முக்கிய கேரக்டரில் என்னுடைய மாணவியும் தீபிகா நடிக்கிறார். இப்படத்தில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடியுள்ள நிலையில், செந்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாம்பு விஷம் எடுக்கும் பாத்திரம் அவருடையது. அவர் இருள சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன், அவர் இருளியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காண்கிறார்.

Advertisement