இதற்கு செலவழிப்பதற்கு ஈழத்து ஏழைகளுக்கு உதவலாமே. கேள்வி கேட்டவருக்கு செந்தில் கணேஷ் பதிவிட்ட பதில்.
செந்தில் கணேஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், இவர்கள் சென்னையில் தான் வசித்து வருகிறார்கள். இவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்கள். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.
போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார். இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டையும் தட்டிச் சென்றார். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.
தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல்ல பட்டி தொட்டி எங்கும் தெறிக்க விட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் செந்தில் கணேஷ்-- ராஜலட்சுமி அவர்கள் லண்டன் சென்று உள்ளார்கள். மேலும், அவர்கள் லண்டன் சென்று உள்ள பயணத்தை குறித்து பதிவிட்டு இருந்தார்கள். அதற்கு ஒரு நபர் இதற்கு செலவழிப்பதற்கு பதில் ஈழத்து ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?? என்று கேட்டு இருந்தார். அதற்கு செந்தில் கணேஷ் அவர்கள் எங்களுக்கு கிடைத்த வருமானத்தில் பல பேருக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
இதையும் பாருங்க : 45 பைசாவாக இருந்த காலத்திலிருந்தே என் தலைவரின் திரைப் படங்களை பார்த்து வருகிறேன்- இப்படி ஒரு ரசிகரா ?
சமீபத்தில் கூட 50 ஆயிரம் ரூபாயை ஈழத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து உள்ளோம். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு இது போன்ற செய்திகளை பதிவிட விருப்பம் கிடையாது. உங்களைப் போன்றவர்களுக்காக தான் இந்த பதிவு என்று கூறி இருந்தார். இந்த பதிவை பார்த்து செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர். இவர்கள் தற்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக திகழ்ந்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் செந்தில் கணேஷ் அவர்கள் ‘கரிகாலன்’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
https://www.facebook.com/senthilganeshofficial/
சமீபத்தில் கூட செந்தில் கணேஷ்-- ராஜலட்சுமி மீண்டும் இணைந்து ஒரு புதிய பாடல் ஒன்றை பாடி உள்ளனர் . அது ராம் சிவா இயக்கி வரும் 'ஏன் காதலி சீன் போடுற' என்ற படத்திற்கு ஆம்பூரில் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் இடம் பெற்று உள்ள ‘நில்லா கல்லுல’ என்ற பாடலை செந்தில் கணேஷ்-- ராஜலட்சுமி தான் பாடி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்தில் செந்தில்-- ராஜலக்ஷ்மி தம்பதியினர் பாடப் போகின்றனராம் என்ற தகவல் வந்து உள்ளது.