45 பைசாவாக இருந்த காலத்திலிருந்தே என் தலைவரின் திரைப் படங்களை பார்த்து வருகிறேன்- இப்படி ஒரு ரசிகரா ?

0
5651
Rajini-fan

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். எப்போதுமே இவர் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய நான்கு மகன்களுக்கும் ரஜினிகாந்தின் படத்தின் பெயரை வைத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நெகிழ்ந்து அவரை பாராட்டி உள்ளார்கள். ” மன்னன், முத்து, படையப்பா, பாபா” என நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான இந்த நான்கு திரைப் படங்களின் பெயர்களையும் தன்னுடைய மகன்களுக்கு வைத்திருக்கிறார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் ரஜினியின் மீது அதிக பற்றும் மரியாதையும் கொண்டவர். அதோடு மாதவன் ரஜினி பெயரில் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.

விழா அழைப்பிதழ்

- Advertisement -

மாதவனிடம் இது குறித்து கேட்ட போது அவர் கூறியது, நான் என்னுடைய தலைவர் ரஜினியின் தீவிர ரசிகர். ஆனால், அதற்காக அவருடைய படத்திற்கு பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன். என் தலைவன் என்றும் என் மனதில் இருப்பார். எப்போதும் என் தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கி கொடுப்பேன். வறுமையில் வாடும் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வாங்கி கொடுப்பேன். இந்த மாதிரி செயல்களை மட்டும் தான் என்னுடைய தலைவரின் படத்தின் போது நான் செய்வேன்.

இதையும் பாருங்க : பர்ஸ்ட் லுக் போஸ்டர விடுங்க. அதவிட செகன்ட் லுக் போஸ்டரில் செம மாஸான விஷயம் இருக்கு.

எனக்கு என் தலைவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால அவர் பெயரை சொல்லி சின்ன சின்ன உதவிகளை செய்து வருகிறேன். அவருடைய எளிமை மற்றும் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சினிமா டிக்கெட் விலை 45 பைசாவாக இருந்த காலத்திலிருந்தே என் தலைவரின் திரைப் படங்களை பார்த்து வருகிறேன். எனக்கு இந்த அளவிற்கு தீவிரமாகியது என் தலைவரின் “பைரவி” படம் தான். அந்த படத்தில் இருந்து தான் எனக்கு ரஜினிகாந்த் மீது அதிக பற்றும் மரியாதையும் ஏற்பட்டது. ஒரு முறை “ராணுவ வீரன்” திரைப் படத்தை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுக்க வேலை செய்து காசு சேர்த்தேன். அந்த அளவிற்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-
பத்திரிக்கையில் மகன்களின் பெயர்

அதனாலே அவர் நடித்த படங்களின் பெயர்களை என்னுடைய மகனுக்கு வைத்தேன். என் மூத்த மகன் பெயர் மன்னன் என்ற மோக மன்னன், இரண்டாவது பையன் பெயர் முத்து, மூன்றாவது பையன் பெயர் படையப்பா, நான்காவது பையன் பெயர் பாபா என்று என் தலைவர் ரஜினி நடித்த படத்தின் பெயரை வைத்து உள்ளேன் என்று கூறினார். நான் ரிக்ஷா வண்டி ஓட்டினால் தான் என் குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும். எனக்கு எந்த ஆசையும் கிடையாது. அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என என்னுடைய தொண்டர்களும், என்கூடவும் இருப்பவர்கள் பேசுவாங்க. ஆனால், எனக்கு அதில் கூட பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. என்றும் என் தலைவர் நீடோடி வாழ வேண்டும் என்று கூறினார்.

Advertisement