கூலிங் கிளாஸ், மாடர்ன் உடை. பாரின் ரிட்டர்ன் ரேஞ்சுக்கு மாறிய ராஜ லட்சுமி.

0
1909
Senthil
- Advertisement -

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மிக்கு அறிமுகம் தேவையில்லை. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும்,போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.

-விளம்பரம்-

மேலும், இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும்,இந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். மேலும், தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல் தெறிக்கவிட்டது என்று சொல்லலாம்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாட்டை அதிகம் விரும்பி கேட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் பிரபலமானார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் லைம் லைட்டாக இருந்து வந்த செந்தில் கணேஷிற்கு தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது ‘கறிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். 

மேலும், செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி இருவரும் வெளிநாடு வரை சென்று பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் சாம்பியன்’ நிகழ்ச்சியில் பங்குபெற்று உள்ளார்கள். அதில் இருவருமே பாரின் ரிட்டர்ன் போல படு மாடர்ன் உடையில் வந்து அசத்தி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement