ப்பா, செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி தங்கள் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார்கள் பாருங்க

0
2929
- Advertisement -

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

-விளம்பரம்-

போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும், இந்த சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

- Advertisement -

அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல்ல தெறிக்கவிட்டது. என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார்கள்.

மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து உள்ளார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை கூட வைத்து நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு சில முறை இவர்கள் மாடர்ன் உடைகளில் வந்து அசத்தியுள்னர். இப்படி ஒரு நிலையில் இவர்களது திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எப்படி உள்ளார்கள் என்று நீங்களே பாருங்க.

-விளம்பரம்-
Advertisement