சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவா இது ? அன்றும் இன்றும் அவர் பாடிய ‘குழலூதும் கண்ணனுக்கு’ பாடல்.

0
1028
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இப்போது ஸ்டார்களாக உள்ளார்கள். திவாகர், சந்தோஷ் பிரவீன், சத்யபிரகாஷ் என்று பலரும் கோலிவுட்டில் பாடகர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

அதேபோல் ஜூனியர் சீசனில் கலந்துகொண்ட நித்திய ஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா என்று பல பேரும் தற்போது வளர்ந்து பாடகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக ஸ்ரீநிஷா நல்லா வளர்ந்து விட்டார். மேலும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிஷா. இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இதனால் இவருக்கு என்றே சோசியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் இவரை இன்ஸ்டாவில் தொடர்பவர்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறார்கள்.

ஸ்ரீநிஷா முதலில் பாடிய படம்:

இந்த முதல் சீசனில் வெற்றியாளராக ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டாலும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுபவர் ஸ்ரீநிஷா தான். அது மட்டுமில்லாமல் கே பி சுந்தராம்பாள் வாய்ஸில் கலக்கிய தேனிசை என்றும் பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பின் இவர் சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளுக்கு சென்று பாடி இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறார். பின் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

ஸ்ரீநிஷா பாடிய படங்கள்:

அதனைத் தொடர்ந்து காதலும் கடந்து போகும், இமைக்கா நொடிகள், தமிழ் படம் 2, ஆக்சன், புலிகுத்தி பாண்டியன் போன்ற பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பாடி இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக பாடி இருக்கிறார். இவர் பாடி இருக்கும் படங்கள் எல்லாம் கூடிய விரைவில் திரைக்கு வெளிவர இருக்கிறது. இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் நிறைய ஆல்பம் பாடல்களில் பாடி வருகிறார். தற்போது கௌரி கிஷன் படத்திலும் ஸ்ரீநிஷா பாடியிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீநிஷாவின் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

ஸ்ரீநிஷா பாடிய வீடியோ வைரல்:

அது என்னவென்றால், ஸ்ரீநிஷா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போது குழலூதும் கண்ணனுக்கு என்ற சித்ரா பாடிய பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் மெல்ல திறந்தது கதவு என்ற படத்தில் வெளிவந்து இருந்தது. இந்த பாடல் சினிமாவில் எவ்வளவு பிரபலம் ஆனதோ, அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஸ்ரீநிஷா பாடியதற்கு அப்புறம் பிரபலமானது. இந்நிலையில் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பாடி இருப்பதையும் தற்போது இவர் இந்த பாடலை பாடியிருப்பதையும் இனைத்து சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் அப்படியே குரல் இருக்கிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement