நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - 'உடல்நிலை' குறித்து விளக்கம் அளித்த லதா

By Rajkumar · 28/10/2021

நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை.அதே போல கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜீராவ் காயகவாட் இன்று இந்தியாவை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

ரஜினி கொரோனா ஊசி செலுத்திக்கொண்ட போது

தற்போது 70 வயது ஆகும் ரஜினிக்கு கடந்த சில காலமாக உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போய்விடுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிக்கு திடீர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட நடந்து இருக்கிறது.

இதையும் பாருங்க : 95 நாட்களுக்கு பின் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் - யாஷிகா பகிர்ந்த வீடியோ (பாக்கவே பாவமா இருக்கே)

இதனாலேயே ரஜினி அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினி இன்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவரது மனைவி லதா,அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.

அண்ணாத்த படத்தை தன் பேரன்களுடன் பார்த்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல இந்த படத்தை நேற்று தன்னுடைய கரங்களுடன் பார்த்த ரஜினிகாந்த் என்ற அனுபவத்தை தன் மகள் புதிதாக ஆரம்பித்துள்ள நிலையில் ஆடியோ தெளிவாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full