சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா மன்னராக விலகி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 165 திரைப்படங்களில்நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

தென்னிந்தியவையும் தாண்டி உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ் என்றால், அனைவரின் மனதிலும் நிற்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு 5 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ‘Rags To Riches Story ‘ என்கிற பாகத்தில் இவரைப்பற்றிய தகவல்களை பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் பெருமையடைந்துள்ளனர்.

இதையும் படியுங்க : மெர்சல் பட குட்டி சிறுவன் பிறந்தநாளுக்கு தளபதி கொடுத்த பரிசு.! வைரல் புகைப்படம்.! 

Advertisement

பெங்களூர் – திருப்பத்தூர் மார்க்கத்தில் ஒரு கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ரஜினி. தனது 26 வயதில் சென்னை வந்து பட வாய்ப்புகள் தேடினார். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.

ரஜினி பட்ட கஷ்டங்கள், போராட்டம், சினிமா பிரவேசம், வாங்கி குவித்த விருதுகள், நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்து விஷயங்களும் பாட புத்தகத்தில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன.ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதே போல விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி cbsc பாட புத்தகத்திலும், தமிழக பாட புத்தகத்திலும், அழிகிய தமிழ் மகன் படத்தில் வரும் உன்னால் முடியும் என்ற பாடல் பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது என்பதும் கவனிக்கபட வேண்டிய விஷயம்.

Advertisement
Advertisement