இறந்த கணவர், வயதுக்கு வந்த மகள், 45 வயதில் போதை பொருள் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளருடன் நெருக்கம் காட்டிய மாஸ்டர் பட நடிகை.

0
2356
Surekha
- Advertisement -

போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் உடன் அம்மா-மகள் நடிகை நெருக்கமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கு டோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பல முன்னணி பிரபலங்கள் வீட்டில் சோதனையும், போலீஸ் விசாரணையும் மேற்கொண்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் தயாரிப்பாளர் கே பி சவுத்ரியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

கே வி சவுத்ரி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர். இவர் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சில நாட்களுக்கு முன்பு சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கேபி சவுத்ரி இடமிருந்து போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்திருக்கிறார்கள். பின் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்:

அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை ஒருவர், வேறு சில நடிகைகளிடம் சவுத்ரி அவர்கள் 100க்கும் மேல் தடவை போனில் பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளும் நடந்து இருக்கிறது. போலீசும் இது தொடர்பாக ஆய்வு செய்து இருக்கிறார்கள். பின் கே பி சவுத்ரி தொலைக்காட்சி திரைப்படம் மற்றும் வணிகத்துறையை செய்த 12 பிரபலங்களுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

இது தொடர்பான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அதோடு கே பி சவுத்ரி பெங்களூர் மற்றும் கோவாவில் இருந்து போதை பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்திருக்கிறது. இவர் பிரபலங்களை குறிவைத்து வார இறுதி பார்ட்டிகளில் தன்னுடைய போதை பொருட்களை விற்பனை செய்து இருக்கிறார். இதுவரை அசுரெட்டி, சினிமா நடிகை ஜோதி, பஞ்சாகுட்டா புஷ்பக் கேப்ஸ் உரிமையாளர் ரத்தன் ரெட்டி ஆகியோரிடம் கேபி சௌத்ரி போனில் பலமுறை பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த வழக்கில் சிக்கிய பிரபலங்கள்:

அது மட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதியின் மகன்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்ததாக விசாரணையில் கேபி சவுத்ரி கூறியிருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தெலுங்கு நாயகி, சில ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடிய ஹீரோயினியும் இந்த விவகாரத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஹீரோயினிகள் யார் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

கே பி சவுத்ரியுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை:

தற்போது பிரபல நடிகை சுரேகா வாணியின் மகள் சுப்ரீதா மற்றும் கே பி சவுத்ரி புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால், இந்த புகைப்படத்திற்கும் இந்த போதை பொருள் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று நடிகை சுரேகா வானியின் தரப்பில் கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சுரேகாவாணியின் கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தான் மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement