நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத நீயெல்லாம் விஜய் பத்தி பேசுற. மாநாடு பட தயாரிப்பாளர் வெளுத்து வாங்கியது யாரை தெரியுமா?

By Rajkumar · 11/5/2020

உலகம் முழுவதும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி உள்ளார். கொரோனா காரணமாக மாஸ்டர் படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை அனைவருக்கும் தெரிந்ததே. அது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் மக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது விஜய் அரசியல் வருவதற்கு ஒரு அடித்தளமாக உள்ளது என்றும் பல்வேறு வதந்திகளையும் கிளப்பினார்கள். விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை பலர் அரசியலாகவே மாற்றிவிட்டார்கள். தற்போது தான் இந்த பிரச்சனை ஓய்ந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் துக்லக் ரிப்போர்ட்டரான குருமூர்த்தி அவர்கள் விஜய் குறித்து மீண்டும் ஒரு பரபரப்பை சோசியல் மீடியாவில் கிளப்பியுள்ளார்.

இதையும் பாருங்க : உங்கள் மகளை இப்படி விமர்சிப்பிங்களானு. சூர்யா பட இயக்குனரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அப்பாவி மக்கள் பரிதவித்து வருகிறார்கள். கொரோனாவை எதிர்த்து உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் ஒருவேளை சாப்பாட்டிற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றன. இதனால் பல பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அதிலும் நடிகர் விஜய் அவர்களும் பணம் கொடுத்திருந்தார்.

https://twitter.com/sureshkamatchi/status/1259018943164903429

இந்த நிலையில் நடிகர் விஜய் கொரோனாவிற்கு நிதி அளிக்க தாமதம் ஆனதற்கு காரணம் என்ன என்பதை துக்லக் ரிப்போர்ட்டர் குருமூர்த்தி சோசியல் மீடியாவில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, வருமான வரித்துறையினர் நடிகர் விஜய்யின் பணத்தை எல்லாம் சுருட்டி கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால் அவர் அங்கும் இங்கும் என யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கு இவ்வளவு நேரம் தேவைப்பட்டது என்று நக்கலாக கூறியுள்ளார். இந்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பல பிரபலங்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

இதனை தொடர்ந்து இதை பார்த்த இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்கள் கூறியிருப்பது, அரசியல்வாதிகளை எல்லாம் தன்னுடைய கைக்குள் போட்டுக்கொண்டு சம்பாதித்து இருக்கும் குருமூர்த்தி இதுவரை கொரோனா நிதியாக அஞ்சு பைசா கூட கொடுத்ததில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனித நேயத்துடன் உதவியதை நக்கலடித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கொடுமை என்றால் தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் சிரமங்கள் இருந்தும் தன் மக்களுக்காக கொடுப்பதை ஒருநாளும் மறந்ததில்லை தளபதி. அதேபோல் வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதி முறையாக அனுமதி வாங்கி நிதி கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டது. இதுதான் உண்மையான காரணம் என்று கூறினார். விஜய் ரசிகர்கள் எல்லாம் குருமூர்த்தியை சும்மா தாறுமாறாகக் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full