என் பயோ பிக்கில் சூர்யா தான் நடிக்கணும் – இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அதிரடி. இவர் தான் CSK பிளேயராச்சே.

0
996
surya
- Advertisement -

சமீப காலமாகவே இந்தியா சினிமாவில் பயோபிக் படங்கள் எடுப்பது ட்ரெண்ட்டிங் ஆக உள்ளது. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. பல வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பயோபிக் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இயக்குனர்களும் விளையாட்டு வீரர்களின் கதையை ஆர்வமாக எடுத்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் அசாருதீன், சச்சின், தோனி என்று இந்திய அணியின் பல நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பயோ பிக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்திற்கு எழுந்த எதிர்பார்பால் இந்த படம் கைவிட பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தனது வாழ்க்கை சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ் மேனும் சி எஸ் கே அணி வீரரருமான சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தொகுப்பாளர் பாவனா சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டி எடுத்தார். அந்தக் கலந்துரையாடலில், ’உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டார்.

Suresh-raina-Surya

இதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யா தான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்யமுடியும்’ என்று பதிலளித்துள்ளார். நடிகர் சூர்யா இதுவரை விளையாட்டு சம்மந்தப்பட்ட படத்தில் இது வரை நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement