தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா-ஜோதிகா. அதிலும, தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் பல வந்தாலும் பல போராட்டங்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு தியா என்னும் மகளும், தேவ் என்னும் மகனும் உள்ளனர். மேலும், சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா சூர்யா ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் திரைப்பட விழாவில் விருதும் வென்றது.
ஜோதிகா மகள் தியா படம்:
தியா இயக்கியுள்ள ‘The Untold Story of Women Behind the Scenes’ என்ற ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம் பேர் விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றது. பின் ஃபிலிம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதுனையும் வென்றது. சினிமாவில் பயணித்து வரும் லைட் வுமன்கள் குறித்து தான் தியா 'லீடிங் லைட்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை எடுத்து இருக்கிறார்.

படத்தின் கதை:
இது பாலிவுட்டில் பணிபுரிந்து வரும் லைட் வுமன்களிடம் பேட்டி எடுத்து அந்த குறும்படத்தை எடுத்து இருக்கிறார். லைட் வுமன்களாக அவர்கள் பணியாற்றிய அனுபவத்தையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும் குறித்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குறும்படம் ஒரு ஒளி தரும் கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் கதை. இந்த குறும்படத்தை ஜோதிகா- சூர்யாவுடைய 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்:
உலகம் எங்கும் பாராட்டுகளை அள்ளி வரும் தியாவின் இந்த குறும்படம் ஆஸ்கார் தகுதிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி திரையரங்கில் திரைப்பட இருக்கிறது. செப்டம்பர் 6ஆம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12 மணிக்கு இந்த குறும்படத்தை திரையிடுகிறார்கள். இயக்குனராக அவதரித்த முதல் படத்திலேயே பல முக்கியமான மேடைகளுக்கு தியா சென்றிருப்பதால் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






