நான் எலிமினேட்டும் ஆகல, Quitவும் பண்ணல – சர்வைவர் போட்டியாளர் கொடுத்த ஷாக். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் வீடியோ.

0
6825
lady
- Advertisement -

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த இடத்தில் ஒன்றாக சேர்த்து அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 பேர்களை இரு அணிகளாக காடர்கள், வேடர்கள் என பிரித்து சவால்கள் தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சண்டை தொடங்கியது. பின் எலிமினேஷன் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து லேடி கேஷ் என்பவர் தற்போது வெளியேறி உள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த நிகழ்ச்சி இன்னும் 8 நாட்களில் முடிவடைகிறது. விஷயம் என்னவென்றால் நான் எலிமினேட் ஆகவில்லை, குய்ட்டும் பண்ணவில்லை. இரண்டையும் தாண்டி பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. அந்த விஷயத்தில் தான் கேமை விட்டு வெளியே வர சூழ்நிலை வந்து இருக்கிறது. இது எனக்கு ரொம்ப கஷ்டத்தை தருகிறது. எப்போதும் என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள், என் பக்கம் நியாயம் இருக்கிறது. எனக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை இருக்கிறது. இண்டஸ்ட்ரியில் நிறைய தப்பான விஷயங்கள் நடக்கிறது. நல்ல விஷயம் என்றால் முன்வந்து சொல்கிறார்கள் தவறான விஷயங்கள் நடந்தால் அதை யாரும் சொல்ல மாட்டுகிறார்கள். இதனால் நமக்கு பின்னாடி பிரச்சனை வருமோ? என்று பயந்து போய் விடுகிறார்கள்.

- Advertisement -

ஆனால், நான் அந்த மாதிரி பெண் கிடையாது. எனக்கு எந்த பயமும் கிடையாது. நான் என்னுடைய வெப்சைட் மூலமாக சில விஷயங்களை உங்களுக்கு சொல்லுவேன். மெசேஜ் வந்தவுடன் அதை தயவு செய்து பாருங்கள். நான் இங்கே இருந்து சென்னைக்கு வரும்போது உங்களுடைய அன்பும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தற்போது எனக்கு உடம்பு சரியில்லை இருந்தாலும் இந்த மெசேஜ் சொல்லித்தான் ஆகணும். இங்கே எல்லாம் தவறாக இருக்கிறது. தப்பாக இருக்கிற விஷயத்துக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கணும். ஒரு லவ், நியாயம், உண்மை என்றும் ஜெயிக்கும் என்று கூறியிருந்தார்.

இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் ஏன் இப்படி பேசியுள்ளார்? என்ன மெசேஜை சொல்லப்போகிறார்? சர்வைவர் நிகழ்ச்சியில் அப்படி என்னதான் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது என்று பலவிதமான சர்ச்சைகள் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement