சீரியஸாக சண்டைக்காட்சியை முடித்துவிட்டு சூர்யா செய்த சேட்டை - வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
https://www.instagram.com/p/CBAt0iAghdY/?igshid=2lnwn3hpr2lm
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் பாருங்க : இறுதி சுற்று படத்தில் ரித்திகா அக்காவாக வந்த லக்ஸ்ஸா இது. பாத்தா நம்பமாடீங்க.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாசு என்கிற மாசிலாமணி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் காமெடி கலந்த திரில்லர் படமாகும். இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வீடியோவை தான் தற்போது சூர்யா அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ அப்பா சூர்யா சண்டை போடும் காட்சியின் போது எடுக்கப்பட்டது. இதை பார்த்து பலரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா இவ்வளவு ஜாலியாக இருப்பாரா என்றும் கேட்டு வருகிறார்கள்