சூர்யாவின் தோலுக்கு மேல் வளர்ந்துள்ள அவரின் மகள் – தன் மகளுடன் வெளியில் வந்த சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

0
1060
surya
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளான அஜித்-ஷாலினி ,பிரசன்னா-சினேகா மற்றும் சூர்யா-ஜோதிகா இதில் மிகவும் பிரபலமான ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. நடிகர் சூர்யா அவர்கள் நடிகை ஜோதிகா உடன் அவர்கள் நடிகர் சூர்யாவுடன் 7 படத்திற்கு மேல் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார். பின் இருவரும் காதலித்து 2006 ஆம் அவர்கள் செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமா உலகில் இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் முகம் காட்டியதில்லை. இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். தனது சகோதரியை போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

- Advertisement -

சூர்யா மகள் தியா :

தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றியும் அடைந்தார். இப்படி ஒரு நிலையில் சூர்யா தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவரது மகள் சசூர்யாவின் தோலுக்கு மேல் வளர்ந்து இருப்பதை பார்க்கையில் ரசிகர்கள் பலரும் என்ன இப்படி வளைந்துவிட்டார் என்று வாயடைத்து போயுள்ளனர்.

சூர்யா இறுதியாக நடித்த படம் :

நடிகர் சூர்யா இறுதியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து இருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு முன் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

-விளம்பரம்-

விக்ரம் படத்தில் சூர்யா :

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றியடையவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சூர்யா. 5 நிமிடங்களே வந்தாலும் இந்த படத்தில் சூர்யாவின் போர்ஷன் திரையரங்கில் தெறிக்கவிட்டுள்ளது.

இரும்புக்கை மாயாவி :

நடிகர் சூர்யா ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் பர்ட்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளியான நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது. இப்படி ஒரு நிலையில் சூர்யா, விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். விக்ரம் படத்தை பார்க்கும் போது இந்த படத்தின் அடுத்த பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement