சூர்யா ஜோதிகா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.! ரசிகர்கள் குஷி.!

0
3410
Surya-Jyothika
- Advertisement -

தமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதியர்களான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு முன்பாகவே பல படங்களில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து போவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்கா காக்க, மாயாவி, பேரழகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளனர். இதில் காக்க காக்க படம் தான் மற்ற படங்களை விட மாபெரும் வெற்றி பெற்றது.

- Advertisement -

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தனது முதல் போலீஸ் படத்திலேயே ஹிட் கொடுத்தார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்வுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து பேசியுள்ள கலைப்புலி தாணு அப்படிலயெல்லாம் இல்லை என்று மறுத்துள்ளார். இருப்பினும் காக்கா காக்கா இரண்டாம் பாகம் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாராகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement