அயன் படத்தில் சூர்யா போட்ட லேடி டிரஸ் இந்த நடிகை இந்த படத்தில் போட்ட அதே டிரஸ் தான்.

0
26580
ayan

லாக்டுவுன் நீண்ட நீண்ட மீம் கிரியேட்டர்களின் சிந்தனை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் படங்களில் செய்த தவறுகள், அதில் வந்த சில அறிய தகவல்களை எல்லாம் நோண்டி நொங்கெடுத்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அயன்’ படத்தில் இருந்த ஸ்வாரசியான தகவல் ஒன்றை மீம் கிரியேட்டர்கள் கண்டு பிடித்து மீம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன் என்று பலர் நடிப்பில் வெளியான ‘அயன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெறும் 15 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான இந்த திரைப்படம் 80 கோடி வசூலை குவித்து நல்ல லாபத்தை ஈட்டியது.

- Advertisement -

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் கூட ஹிட் அடித்தது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற பல பலக்குற பகலா நீ பாடல் சிறந்த நடன அமைப்பிற்க்க விருதையும் பெற்றது. இந்த பாடலில் சூர்யா பல்வேறு கெட்டப்பில் வருவார்.

அதில் ஒரு கெட்டப்பில் சூர்யா சிகப்பு நிற குட்டை ஆடையில் பெண் வேடத்தில் தோன்றுவர். இந்த கெட்டப்பை சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கூடை சன் லைட்’ ஸ்ரேயாவின் கெட்டப்பை போன்றே இருக்கிறது. இந்த பாடலில் ஸ்ரேயா அணிந்த அதே போன்ற ஆடை மற்றும் கெட்டப்பை தான் சூர்யா இந்த பாடலில் போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement