அகரம் Culturals விழாவில் மாணவிக்கு நூல் விட்ட மணவன் – சூர்யாவின் Reaction. இதோ வீடியோ.

0
793
Surya
- Advertisement -

அகரம் பவுண்டேஷனின் பத்தாவது ஆண்டு விழாவில் மாணவன் மாணவி செய்த செயல் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டுள்ளது.

- Advertisement -

சூர்யா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதற்கு பின் பா.ரஞ்சித்-சூர்யா கூட்டணி, வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது. மேலும், இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார். விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார்.

அகரம் அறக்கட்டளை:

இதை எல்லாம் இவர் அகரம் அறக்கட்டளையின் மூலம் செய்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நிறுவனர் நடிகர் சூர்யா சிவகுமார் ஆவார். இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அகரம் அறக்கட்டளை குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இதை ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவர்கள் பல வருடங்களாக செய்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதை எடுத்து செய்து வருகிறார். சமுதாயத்தின் பின் தங்கி உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை தேடி அவர்களுக்கான நிதி உதவி வழங்க பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. இதில் பல பேர் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் விழாவின் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

அதாவது, அகரம் பவுண்டேஷனின் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. இது மூன்று வருடத்திற்கு முன்னதாகவே நடந்தது. அப்போது மாணவ, மாணவிகள் எல்லோருமே மேடையில் சூர்யாவுடன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். அப்போது மாணவன் ஒருவன் மாணவிக்கு நூல் விட்டிருக்கிறார். இதை பார்த்த சூர்யா சிரித்துக்கொண்டு அந்த மாணவனின் தோள் பட்டையில் தட்டி இருக்கிறார். இந்த வீடியோவை தான் தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement