தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் நடிப்புத் திறமையும் இருந்தால் மட்டுமே அவர்கள் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் ஆணித்தரமான உண்மை எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்தாலும் தமிழ்சினிமாவில் திறமையான நடிகர்கள் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் ஒருவ.ர் என்னதான் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது என்னவோ நந்தா திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்குப் பின்னர் இவர் நடித்த எண்ணற்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.

ஆனால், சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் எதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை. இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் ஓரளவிற்கு தான் வெற்றியை கண்டது. ஆனால், சமீபத்தில் இறுதிச்சுற்று புகழ் சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. கொரோனா பிரச்சினைக்கு பின்னர் OTT தளத்தில் வெளியான தமிழ் படங்களில் முதல் வெற்றி படமாக சூர்யாவின் இந்த படம் அமைந்திருக்கிறது.

Advertisement

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.

இந்த படத்தை பார்த்த பலரும் சமூக வலைத்தளத்தில் சூர்யாவை பாராட்டிய பல பதிவுகளை போட்டு வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சூர்யாவின் ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில் ‘அண்ணா உங்களுக்காக இந்த ட்விட்டரில் மூன்று வருடங்களாக இருந்தும் உங்கள் கிட்ட இருந்து ஒரு லைக் கூட வாங்க முடியல என்று சோகத்தோடு பதிவிட்டிருந்தார். ரசிகரின் இந்த பதிவை கண்ட சூர்யா உங்களின் அனைத்து அன்பிற்கு மிக்க நன்றி என்று பதில் கொடுத்து அந்த ரசிகரின் மூன்று வருட காத்திருப்பில் பூர்த்தி செய்திருக்கிறார்.

Advertisement
Advertisement