காப்பான் படப்பிடிப்பில் அஜித் ஸ்டைலை காப்பி அடித்த சூர்யா.! என்னனு பாருங்க.!

0
1102
Surya-ajith
- Advertisement -

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் தற்போது சூர்யாவின் என் ஜி கே, காப்பான் போன்ற படங்கள் தயாராகி வருகிறது. இதில்
சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

- Advertisement -

சமீபத்தில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக அஜித்திற்கு தான் சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பல படங்களின் படப்பிடிப்புகளில் அவரே பிரியாணி சமைத்து தனது சக கலைஞர்களுக்கு பரிமாறியுள்ளார். தற்போது சூர்யாவும் அஜித்தின் பாணியில் பட குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement